கடிதத்தின் பதில் 

                                                                                                           

அன்பின் தம்பி,

ஒரு சில அற்புதங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். முதலாவதாக, நீங்கள் என்னிடம் எதைக் கேட்க முயன்றீர்களோ அது தானாக நிகழும் ஒன்று. அது ஏற்கனவே உங்களுக்குள் நிகழ்ந்துள்ளது. நீங்கள் கேட்பீர்கள் என்பதை இந்தியாவுக்கு வரு முன்னரே உறுதியாக உணர்ந்திருந்தேன். நீங்கள் நாளைக்குக் கேட்பேன் என்று கூறியதும் ஏற்கனவே உங்களிடம் அதற்கான தேடுதல் இருப்பதாலும் அந்தத் தேடல் உணரவைக்கும் என்பதாலும் அதை நான் மறுநாள் தொடரவில்லை. உங்கள் கடிதத்தில் அதையே குறிப்பிட்டிருந்தீர்கள். உண்மையில் இது புனிதமான உள்ளுணர்வின் இணைப்பு மட்டுமே. உருவங்கள் தொடர்புபடுவதில்லை. ரமணர் ஆச்ச்சிரமத்தில் தியானத்தின் போது முகம் தெரிவதாகக் குறிப்பிட்டீர்கள். அதுவும் தவிர்க்கப் பட வேண்டும் என்பதாலும் நீங்கள் கேட்க இருந்ததை நான் அடுத்த நாள் நினைவு படுத்தவில்லை. பல சம்பவங்களில் உங்களின் அன்பு ஊற்று என்னை மெய் சிலிர்க்க வைத்துக்கொண்டு இருக்கிறது. அந்த அளவுக்கு நான் பாக்கியவானா என்று அடிக்கடி என்னை நான் கேட்பதுண்டு. வவுனியாவில் இருந்து புகையிரதத்தில் வந்துகொண்டிருந்த பொழுது நான் வாசலில் நின்று கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் நீங்கள் வந்து கையை எனக்கு முன்னால் நீட்டி ஒரு கம்பியில் பிடித்துக்கொண்டு எனக்குப் பாதுகாப்புக் கொடுத்துகொன்டிருந்தீர்கள். இப்படிப் பல நூறு சம்பவங்கள். 'நான் கேட்க இருந்த வரம் என்னவாக இருக்கும்?' என்று கேட்டிருந்தீர்கள். நான் அறிந்த வரையில், இயற்கையின் அற்புதத்தில், ஒரு நிகழ்வு இருமுறை நிகழ்ந்ததாக இருப்பின் அது சித்தாத்தர்(புத்தர்), ஆனந்தருக்குப் பிறகு நாங்கள் இருவரும் தான். இங்கேயும் முக்கிய விடயம் விடயம் ஒன்று உண்டு. தேவைப்படுமாயின் அப்போது பகிர்ந்துகொள்வோம்.

நன்றியுடன்

அண்ணன்


        "ட்டைவிரல் ரேகை கூட நின்

தனித்துவத்தைச் சொல்லும் போது
கலக்கம் ஏன்? களத்தில் குதி!
மெய்வருத்தக் கூலி தரும்
முயற்சியை பயிற்சியோடு செய்
விடாமுயற்சி வெற்றியே தரும்!"

piranthanaal vaazhthu seythi
16.11.2012
நல்வாழ்த்துக்கள்! நாற்பத்தி ஏழு வருடங்கள். உண்மையில் நீங்கள் குறைந்தது 568173600 தரத்துக்கு மேல் நாற்பத்தி ஏழு வருடங்களில் வாழ்ந்துள்ளீர்கள். இந்த எண்ணிக்கை தொடர்ந்து குறைந்தது 1184702400 தரத்துக்கு மேல் வாழ்வீர்கள்! மீண்டும் வாழ்த்துக்கள்.

This free website was made using Yola.

No HTML skills required. Build your website in minutes.

Go to www.yola.com and sign up today!

Make a free website with Yola